31 October 2016

நாதஸ்வரத்தின் மகத்துவம் என்ன


இசையால் இசையாதவர் உலகில் இல்லை .மனிதர்கள் ,விலங்கினங்கள் ,பறவைகள் ,புல் ,பூண்டு மற்றும் அனைத்து உயிர்களும் ஏதாவது ஒரு இசையில் லயம் கொள்கின்றன. இசை என்ற அலைவரிசை மனித மனத்தோடு இணையும் போது பிரபஞ்சத்தோடு கலந்து விடுகின்றோம். மனம் விரிவடைந்து இலகுவாகிறது.
திருமண விசேஷங்களில் நாதஸ்வரம் வாசிப்பதை நாம் காண்கிறோம். அந்த இசை அனைவரின் ஆழ் மனதிலும் மங்கள ஒலியாக பதியப்பட்டுள்ளது.

நாதஸ்வர இசையை ஒலிக்கும் போது ஆழ் மனதில் உள்ள சுப மங்கள எண்ணங்களுக்கு உயிர் ஆற்றல் கிடைக்கிறது.ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் அவர்களது மனதில் பதிந்து உள்ளது. மனிதர்கள் அனைவரும் அவரவர் எண்ணப்படியே வாழ்கின்றனர். நாம் பாகுபாடின்றி நம் உறவினர் அனைவரையும் அழைக்கின்றோம். திருமண மண்டபத்தில் நாதஸ்வர ஒலியை கேட்கும்போது அனைவரின் ஆழ்மனதில் உள்ள நல்ல எண்ணங்கள் ஆற்றல் பெறும். அந்த இசையை கேட்கும் வேளையில் தீய எண்ணங்களை பற்றி யாராலும் சிந்திக்க இயலாது.

குறிப்பாக மணமக்கள் மணமேடையில் இருக்கும்போது இந்த நாதஸ்வர இசை அருமையாக வாசிக்க பட வேண்டும்.நாதஸ்வரத்தால் அனைவரையும் இசைய வைக்க வேண்டும். இசையால் இசைக்க வேண்டும். மோரை கடைந்து வெண்ணை எடுப்பதை போல அனைவரின் நல்ல எண்ணங்களை இயக்கி மணமக்களை வாழ்த்தும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

சில நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒரே நாளில் பல திருமணங்களுக்கு செல்ல திட்ட மீட்டு இருப்பார்கள்.அவர்களை தொடர்ந்து திருமணம் முடியும் வரை அமர வைக்க நாதஸ்வர இசையால் முடியும்.சில  ராகங்கள்  உள்ளது அவை மனிதனை தன்னை மறக்க வைக்கும் ,ரசிக்க வைக்கும்.
அன்னமய கோசத்தால் வளர்ந்தது இந்த உடம்பு. இந்த உடல் நாபி சக்கரத்தால் உருவாக்க பட்டு ஸ்துல இயக்கம் நடை பெறுகிறது.உணர்வு உடலுடன் தொடர்பு கொண்டு செயல்களை செய்கிறது.பயமும் ,பலமும் - அன்பும் ,வெறுப்பும்  அனைத்தும் இச் சக்கரத்தில் இருந்தே செயல் படுகிறது.

நாதஸ்வர கலைஞர் நாபிக்கமலத்தில் இருந்து ரம்மியமான இசையை இசைக்கிறார். அந்த இசைக்கு மண்டபத்தில் உள்ள அனைவரையும் இசையை வைக்கிறார். ஒத்தது ஒத்ததை ஈர்க்கும். அனைவரது நாபி  சக்கரமும் இசையில் இசைந்து கொண்டு திருமண மண்டபத்தில் மகிழ்ச்சிகரமான ,ரம்மியமான சூழலை உருவாக்கும்.

நாதஸ்வரமும் ராகங்களும் 



  1. மாப்பிளை அழைப்பிற்கு      - கல்யாணி ,சங்கராபரணம் 
  2. ஜான வாசத்திற்கு                   -  தோடி ,காம்போதி ,காரகரப்ரியா 
  3. நிச்சயதார்தம் வேளையில்     - கானடா , அட்டானா ,பியாக்கடை 
  4. திருமண வேளையில்            - கேதாரம் ,பூபாளம் ,லஹரி 
  5. முஹூர்த்தம் முன்பு              - தன்யாசி ,நாராயணி 
  6. முகூர்த்த வேளையில்           - நாட்டை குறிச்சி 
  7. தாலிகட்டும் வேளையில்      - அனந்த பைரவி 



பொதுவாக இசை மனிதனை உற்சாக படுத்துகிறது. மனிதனது வாழ்வில் அவனது வீட்டில் அல்லது அவர்களது விசேஷத்தில் நாதஸ்வரம் ஒலிக்கும் போது நன்மை நடக்கிறது. நல்ல காரியம் நடக்கிறது என்று பார்க்கின்ற கேட்கின்ற அனைவரும் அறிவர். நாதஸ்வரம் ஒரு அருமையான மணமக்களை இணைக்கும் ,இசைய வைக்கும் புனித ஒலி ஆகும் .வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் மங்கள ஒலியாகும்.

Image Credit : www.mpmnadaswaram.com

கோவி.வெங்கடேசன்
 
ஜோதிட ஆராய்ச்சியாளர் 
 9940676964 , 9364442500
மதுரை 




No comments:

Post a Comment