திருமணத்திற்கு முன் குலதெய்வம் வழிபாடு அவசியமா
திருமண விழா நல்லபடியாக நடைபெற மற்றும் மணமக்கள் இனிதே வாழ்க்கையை துவக்க குலதெய்வம் வழிபாடு மிக அவசியம். குலதெய்வத்ததுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வது மிக நல்லது.ஒவ்வொரு பரம்பரியத்திலும் குலதெய்வம் உண்டு. பாரம்பரிய தொடர் மேலும் தொடர நன்கு விரிவடைய குலம் செழிக்க குலதெய்வ வழிபாடு மிக அவசியம் .
குடும்பத்தோடு சென்று தான் வழிபட வேண்டும். மணமகன் வீட்டார் என்றால் வரப்போகும் பெண்ணுக்கு எடுத்த புதிய முகூர்த்த பட்டு புடவை ,ரவிக்கை ,மற்றும் எலுமிச்சம் பழம் ,பூ மற்றும் மணமகளுக்கு அணிவிக்கும் நகை ,மாங்கல்யம் ,மண மகனின் ஆடைகள் ஆகியன வைத்து பூஜை செய்ய வேண்டும்.
இதே போன்று பெண் வீட்டாரும் அவர்கள் குலதெய்வம் சென்று பூஜை செய்ய வேண்டும்.
உப்பு மற்றும் மஞ்சள் பூஜை செய்து எடுத்து வைத்திருந்து திருமண மேடையில் விளக்குக்கு முன் வைத்து மணமக்கள் வணங்கவேண்டும்
குலதெய்வ வழிபாட்டில் கிடைக்கும் நன்மைகள்
- தந்தை வழியான குலதெய்வமே நாம் அனைவரும் வணங்குகிறோம். பெண்பிள்ளை எனில் திருமணத்திற்கு பின் கணவன் வழியில் வணங்கு கிறோம் .
- குலதெய்வத்தை வணங்குவதால் நமது உடலில் உள்ள ,ரத்தத்தில் உள்ள பரம்பரை குணங்கள் புதுப்பிக்க படுகிறது.
- விளக்க முடியாத அனைத்து முன்னோர்கள் பற்றிய எண்ணப்பதிவுகளும் நமது மனோ சரீரத்தில் பதிந்துவிடுகிறது. இதனால் நமது வாழ்க்கை மிக எளிதாகிறது. பாரம்பரிய குணாதிசயங்கள் நமக்கு வந்து விடுகிறது.
- ஒன்றுபட்ட ரத்த சம்பந்த உறவுகள் ஒரே இடத்தில் கூடுவதால் உறவு மேலும் இணைகிறது. பலம் பெறுகிறது.
- நாம் பல பிறவிகளாக பிறந்தாலும் ஒரே குலத்தில் மீண்டும் பிறப்பதன் ரகசியம் விளங்குகிறது.
- நமக்கு பிறக்கும் குழந்தைகள் நாம் சொல்லிக்கொடுக்காமல் சில பரம்பரை விஷயங்களை கற்று கொள்கிறது.
கோவி. வெங்கடேசன்
ஜோதிட ஆராய்ச்சியாளர்
மதுரை - 1
எங்களை அழைக்க 9940676964 , 9364442500
No comments:
Post a Comment