காலங்கள் மாறினாலும் கம்யூட்டர் யுகமானாலும் சில பாரம்பரிய பழக்கங்கள் மாறுவதில்லை. திருமணங்களில் பலவிதமான சடங்குகள் இன்றும் கடைபிடிக்க படுகிறது. தாலி காட்டும் போது மூன்று முடுச்சு போடுவது ஏன் என்று அறிந்து கொள்வது மேலும் திருமண வாழ்வில் நம்பிக்கையை கொடுக்கும்.
திருமண வைபவத்தின் போது மாங்கல்ய தாரணம் மிக முக்கியமானது ஆகும் .அப்போது திருமணத்தை நடத்தும் புரோகிதர் திருமாங்கல்யத்தை எடுத்து மணமகன் கையில் கொடுத்து மந்திரங்கள் கூறி மூன்று முடுச்சு போட சொல்கிறார். அந்த மந்திரம் பின்வருமாறு.
"மாங்கல்யம் தந்துனானே மம ஜீ வந ஹேதுநா
கண்டே பத்தாமி ஸுபகே த்வஜீவ சரஸ்சதம் "
பொருள் :
மணமக்கள் நீண்ட காலம் வாழவேண்டும்
நீ சுமங்கலியாக வாழவேண்டும்
நூறு ஆண்டுகள் வாழவேண்டும்
சுகமாக சௌவுக்கியமாக வாழவேண்டும்
என்று பொருள் ஆகும்.
முதல் முடுச்சு கணவன் போடுவார் , அடுத்தஇரண்டு முடுச்சு கணவனின் தங்கை அல்லது அக்காள் போடுவார். இதற்கு பொருள் என்ன வெனில் எங்கள் வீட்டோடு உன்னை இணைத்து கொண்டோம் என்று அர்த்தமாகும். பெண்ணுக்கு பின்னே கணவன் வீட்டார் புடைசூழ நின்றுகொண்டு புதிய பந்தத்தை இணைத்து கொள்வர்.. மணமகள் கழுத்தில் தாலி ஏறிய உடன் திருமணதிற்கு வந்திருந்த அனைவரும் மங்கள வாத்தியதுடன் மணமக்களை வாழ்த்திடுவர்கள்.
தாலி என்பது மார்பில் தொட்டுக்கொண்டே இருக்கும் பந்த கயிறு ஆகும்.இதற்கு சிறப்பு உண்டு.ஒரு பெண்ணின் வாழ்வில் திருமண வாழ்வே மிக முக்கிய மன நிகழ்ச்சி ஆகும்.பெண்மை திருமணத்திற்கு பின் குழந்தை பெற்றதும் முழுமை பெறுகிறது.
Image Credit : https://commons.wikimedia.org
\
கோவி . வெங்கடேசன்
ஜோதிட ஆராய்ச்சியாளர்
மதுரை - 1
எங்களை அழைக்க 9940676964 , 9364442500
No comments:
Post a Comment