வியாழ நோக்கம் வந்த அறிகுறிகள் என்ன ?
ஜோதிடத்தில்
வியாழன் என்பவர் குரு அவர். நடப்பு கோச்சாரத்தில் குரு (வியாழன் கிரகம் ) உங்களது ராசியையோ அல்லது ஐந்து ,ஏழு ,ஒன்பதாவது வீட்டையோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படும். இது ஒரு வருடம் இந்த பார்வை இருக்கும். இந்த கோசார குரு 5,7,9 இடத்தை பார்க்கிறார் . பார்வைக்கு ஏற்ப பலன் மாறுகிறது. மூன்று இடத்திற்கும் மூன்று விதமான பலன் உண்டு. மேலும் நடப்பு திசையை வைத்தே இந்த பலனை உறுதி யாக கூறமுடியும். ஜோதிடம் என்பது கிரகங்களின் அடிப்படையில் அனுமானித்து கூறுவது ஆகும். இது பல நேரங்களில் சரியாகவும் சில நேரங்களில் தவறாகவும் போய்விடுகிறது. ஆனால் நடை முறை வாழ்வில் கீழ் கண்ட அனுபவங்கள் பலருக்கு வியாழ நோக்கம் உள்ள அறிகுறிகளை காட்டுகிறது. இதை வைத்து மேலும் உறுதி செய்து கொள்ளலாம். மனிதனுக்கு உரிய பிராண சரீரத்தில் உள்ள சக்கரங்களின் இயக்கங்களில் வியாழன் என்ற கிரகத்தின் ஆதிக்கம் அதிகமாகிறது. அப்போது மண்ணீரல் மற்றும் சுவாதிஸ்டான சக்கரமும் உச்சத்தில் இருக்கும்.
வியாழ நோக்கம் என்பது ஒரு மனிதனின் சுயமாக முடிவு எடுக்கும் அல்லது தனது நிலையை முழுமையாக அறிந்து கொள்ளும் தருணம் ஆகும். பழம் பழுத்து பக்குவமாக இருக்கும் காலமாகும். காலத்தையும் ,ஜோதிட கட்டத்தையும் ,நடப்பு அனுபவத்தையும் இணைத்து பார்த்தால் வியாழ நோக்கம் எது என்று புரியலாம்.
ஜோதிடத்தில்
- உடலில் இது வரை இல்லாத புத்துணர்வு ஏற்படும். முன்பைவிட தோற்றம் மிக தெளிவாக இருக்கும். பார்ப்பவர்கள் மிக புதுமையாக பார்ப்பார்கள். மிக அழகாக தெரிவர் .
- கண்களில் ஒளி அதிகரிக்கும், கன்னங்களில் பள பளப்பு அதிகரிக்கும். உடல் தனது இளமை தன்மையின் உச்சத்தை அடைந்து விடும்.
- நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது திருமணத்தை பற்றி பேச துவங்குவர். விருப்பங்களை தெரிவிப்பர் . சொந்த பந்தம் , செய்தித்தாள் ,திருமண தகவல் மையம் போன்ற இடங்களை உற்று நோக்குவர்.
- ஆடை அணிகலன்களில் மிக கவனம் செலுத்துவர். முக அழகு , உடல் ஆரோக்கியம் ,தலைமுடி போன்ற விஷயங்களை அதிக அக்கறை கொள்வர்.
- கோவில் பரிகாரங்கள் ,திருமண தடை பரிகாரங்கள் , கோவில் வேண்டுதல் இவைகளில் தடை சொல்லாமல் கடை பிடடிப்பர்.
- சிலருக்கு காதல் உணர்வு ஏற்படலாம். வேண்டாம் என்று கழித்த பெண் அல்லது மாப்பிளையை மீண்டும் பார்க்க தூண்டுவர். வலியுறுத்தி மணம் முடிக்க விருப்பம் கொள்வர்.
வியாழ நோக்கம் என்பது ஒரு மனிதனின் சுயமாக முடிவு எடுக்கும் அல்லது தனது நிலையை முழுமையாக அறிந்து கொள்ளும் தருணம் ஆகும். பழம் பழுத்து பக்குவமாக இருக்கும் காலமாகும். காலத்தையும் ,ஜோதிட கட்டத்தையும் ,நடப்பு அனுபவத்தையும் இணைத்து பார்த்தால் வியாழ நோக்கம் எது என்று புரியலாம்.
கோவி . வெங்கடேசன்
ஜோதிட ஆராய்ச்சியாளர்
மதுரை - 1
எங்களை அழைக்க 9940676964 , 9364442500
No comments:
Post a Comment