நினைத்த மாதிரியான பெண்ணை மனம் முடிக்க

மனிதனின் மனம் ஒரு அருமையான விளை நிலத்தை போன்றது. இந்த பூமியில் உள்ள எல்லா நிலைப்பகுதியிலும் ஏதாவது ஒரு மரம் , செடி ,கொடி ,பூக்கள் முளைத்து கொண்டே உள்ளது. வளர்ந்து கொண்டே உள்ளது.
நமது நிலத்தில் நாம் விரும்பும் தானிய ,அல்லது மரம் ,செடி ,கொடி ,பூக்கள் இவைகளில் எதை வளர்க்க விரும்புகிறோமோ அதற்கு தக்கபடி நிலத்தை பண்படுத்த வேண்டும். தயார் செய்ய வேண்டும்.விதைக்கு தக்க நிலம் அல்லது நிலத்துக்கு தக்க விதை மிக அவசியம் . இதை புரிந்து கொண்டால் விரும்பும் பொருள் விளையும். மாறாக நிர்ப்பந்தமாக விதைத்தலோ அல்லது பசுமை சூழல் அறியாமல் செயல் பட்டாலோ விதை கருகி விடும். அது போல முறையாக நிலம் பண்படுத்தாமல் ,களைகளை நீக்காமல் இயற்கை சக்தியான நீர் நிறைய பூமியை சமன் செய்யாமல் விவசாயம் செய்வது பலன் தராது. முயற்சி விரயம் ஆகும். இதுவே இயற்கை விதி. இது வாழ்க்கைக்கும் பொருந்தும்.
நினைத்த பெண்ணை அடைய மனதை பண் படுத்த வேண்டும். ஆண் எனில் விதை போன்றவன் . பெண் எனில் நிலம் போன்றவள். வைரமும் தங்கமும் பூமிக்கு அடியில் விளைந்தாலும் மனிதனின் காதில், மூக்கில், கழுத்தில் அணிகலனாக வந்து அமர்கிறது. அதை போல விரும்பிய பெண்ணை கவர, ஈர்க்க உங்களை பண்படுத்துங்கள்.
நினைத்த மாதிரியான பெண்ணை அடைய தகுதிகள்
- பொண்ணுக்கு இணையான படிப்பு உள்ளதா ?
- இரண்டு அல்லது மூன்று வயது அதிகமாக உள்ளதா ?
- பெண்ணின் தோற்றதிற்கு நீங்கள் பொருத்த்த்தமானவரா ?
- விரும்புகிற பெண் ஈர்க்கும் குணநலன்கள் ,பழக்கங்கள் உங்களிடம் உள்ளதா ?
- சுயமாக முடிவு எடுக்கும் திறன் உள்ளதா ?
- பெண்ணிடம் உள்ள இயற்கையான அழகு ,அறிவு திறன் ,பண்பு ,குணநலன் ,நடை ,உடை ,பாவனை , பேசசு , இதை விரும்புகிறீர்களா ? அல்லது பெண்ணிடம் உள்ள செயற்கையான அவர்க்கு உரிய தங்க நகைகள் ,சொத்துக்கள் ,அவர் பார்க்கும் உத்தியோகம் ,அவரது சம்பாத்தியம் -வருமானம்,ஒப்பனை (மேக்கப் அழகு ) ஆடை ,அணிகலன்கள் ,வண்டி ,வாகனங்கள் போன்ற இதையெல்லாம் விரும்புகிறீர்களா ?
இதைவைத்தே நீங்கள் நினைத்த மாதிரியான பெண்ணை அடைய இயலும் .
கோவி . வெங்கடேசன்
ஜோதிட ஆராய்ச்சியாளர் மதுரை - 1
எங்களை அழைக்க 9940676964 , 9364442500
No comments:
Post a Comment