திருமணம் செய்துகொள்ள பயமாக உள்ளதா ?
சில குடும்பங்களில் ஏதேனும் துன்பகரமான நிகழ்வுகள் ஏற்பட்டு இருக்கலாம் . முன்னர் வீட்டுக்கு வந்த பெண் தங்க நகை அளவு விட குறைந்து இருக்கலாம். சில வரதட்சணை கொடுமைகளை பார்த்தது இருக்கலாம் .உடன் பிறந்த வர்களின் சம்மதம் இன்றி திருமணம் தள்ளி போகலாம் . அருகில் உள்ள பிடிக்காத குடும்பங்கள் வருபவர்களை திசை திருப்பலாம் .
இன்று திருமணம் செய்து கொள்ள பயமாக சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது . பல கரணங்கள் இருக்கலாம். பணம் , அல்லது நிரந்தர வேலை , தாய்தகப்பன் முயற்சி எடுக்காத நிலை. ஜாதகத்தையே நம்பிக்கொண்டிருப்பது , மேலும் சில நபர்களுக்கு தங்களின் உடல் ஆரோக்கியத்தில் அவநம்பிக்கை இருக்கும் .சிலருக்கு இல்லற இன்பம் பற்றிய பயம் இருக்கும் .ஆண்மை தன்மையிலோ அல்லது பெண்மை தன்மையிலோ ஏதேனும் பிரச்சனை இருக்கலாம்.

என்ன செய்வது ? கண்டு பிடியுங்கள் ஒரு பேப்பரில் எழுதுங்கள் உங்களது உண்மையான பயம் என்ன ?
- திருமண பயத்திற்கு நீங்கள்தான் காரணமா ?
- திருமண பயத்திற்கு உறவினர் காரணமா ?
- திருமண பயத்திற்கு உங்கள் நோய் காரணமா ?
- திருமண பயத்திற்கு கடன் சுமை காரணமா ?
- திருமண பயத்திற்கு உங்களது குடும்பமே காரணமா ?
பருவத்தே பயிர் செய் என்பது பழமொழி. ,ஆடி பட்டம் தேடி விதை , சரியான பருவத்தில் திருமணம் செய்யவிட்டால் பிற்காலத்தில் மிக அதிகமாக வருந்த வேண்டி இருக்கும். மனிதனுக்கு ஏதேனும் பிரச்ச்னைகள் இருந்து கொண்டுதான் இருக்கும் இன்று நாற்பது வயதுக்கு முன்பே சர்க்கரை நோய் போன்ற நீடித்த வியாதிகள் வந்து விடுகிறது. மேலும் முப்பது வயதுக்குள் தான் வீரியம் நன்றாக இருக்கும் .யோசியுங்கள். .திருமணத்திற்கும் பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை .
- திருமண ஆலோசகரை நாடலாம்
- மன நல ஆலோசகரை நாடலாம்
- வயது முதிர்ந்த பெரியவர்களை கலந்து ஆலோசிக்கலாம்
- உங்களுக்கு தொடர்பு இல்லாத அனுபவம் மிக்க மனிதர்களை நாடலாம்
முப்பது வயதிற்குள் திருமணம் செய்வது மிக நல்லது '
கோவி . வெங்கடேசன்
ஜோதிட ஆராய்ச்சியாளர்
மதுரை - 1
எங்களை அழைக்க 9940676964 , 9364442500
No comments:
Post a Comment