பூ சூடுவது என்பது ஒரு பாரம்பரியமான பழக்கம். இதை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து சென்று இருக்கிறார்கள். ஆரோக்கியமான பழக்கம் இது.தினமும் பூ பறிப்பது ஒரு நல்ல அனுபவம். பொறுமையானவர்கள் மட்டுமே பூ பறிக்க முடியும். அல்லது பூ பறிக்க கற்று கொள்வது பொறுமையை வளர்க்கும். பொறுமைக்கு பூமா தேவியை உதாரணமாக சொல்வர். பூவை பறிப்பவர்களிடத்தில் சில அனுபவங்கள் ஏற்படுவதுண்டு ,அதாவது சிலர் பூ செடிக்கு அருகில் செல்ல தயங்குவர் மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளவர் மற்றும் கருப்பை நோய் உள்ளவர் சில நுட்ப உணர்வு உள்ள பூ செடிக்கு அருகில் சென்றால் அந்த செடி மடிந்து விடும். காய்ந்து விடும்.பின் பூக்காது.அதேவேளையில்
- பெண்கள் பூ சூடுவது பெண் தன்மையை மேம்படுத்தும். தலையில் பூ வைப்பது சில நன்மைகளை செய்கிறது.
- பூ வில் உள்ள மிக நுட்பமான பிராண ஆற்றல் மூளையால் கவரப்பட்டு நாளமில்லா மற்றும் நாளமுள்ள சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.
- பூவின் பிராண ஆற்றல் மன அழுத்தத்தை குறைத்து இயல்பான தன்மையை வழங்குகிறது.
- பெண்களுக்கு பூவையர் என்று ஒரு சொல் உள்ளது. பூவை போல மலர்ந்த முகத்துடன் இருப்பவர்கள். தலையில் பூ வைப்பவர் மற்றும் வைக்காதவர் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்.
- சினைமுட்டை முதன் முதலில் வெளி வர துவங்குவதையே பெண் பெரியவளாகி விட்டாள் என்று கூறுகிறோம். அதாவது பூப்பெய்தி விட்டாள் என்று கூறுகிறோம். பெண்ணை பூவாக கருதுகிறோம். பெண்ணை பூவிற்கு ஒப்பிடுகிறோம்.
என்ன பூ சூடுவதால் என்ன நன்மை உண்டாகிறது ?
- தலை நோய்கள் ,தலை வலி ஒரு தலை வலி இவை வருவதில்லை. கனகாம்பரம் இந்த அற்புதமான வேலையை செய்கிறது.
- தலையில் ஈறு பேன் தொல்லை இருக்காது. துளசி ,மரிக்கொழுந்து போன்ற வற்றிற்கு சக்தி அதிகம்.
- மல்லிகை சூடுவதால் மூளையில் உள்ள துர்நீர் இளக்கம் உண்டாகி தும்மல் ஏற்பட்டு அனைத்து வெளியே வர துவங்குகிறது.ப்ரோலக்ட்டின் சுரப்பு இயல்பு நிலை அடைகிறது. பெண்மை தன்மையை உணர மல்லிகை மிக அதிகமாக உதவுகிறது.மல்லிகை சூடும் பெண்களுக்கு கூருணர்வு மிக தெளிவாக இருக்கும்.
- பூ அல்லது கனகாம்பரம் அல்லது ரோஜா மாலை ஏதேனும் மார்பில் அணியும் போது நம் இருதய த்தின் சக்தியால் உடல் முழுவதும் பரவுகிறது.பிராண சரீரம் பலம் பெறுகிறது. இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.
- பூவின் சக்தி நம் உடலின் செல்களை உற்சாக படுத்தி அதன் இயல்பு தன்மையினை பெற உதவுகிறது . இதனால் நாம் பாரம்பரிய குணாதிசயத்தை பெறுகிறோம். இன்று அதிகமானவர்களுக்கு மன அழுத்ததினால் உடல் செல்கள் இறுகிப்போய்விடுகிறது.
- பூவைத்த பெண்ணை பார்க்கும் போது முழுமை நிறைந்த பெண்ணாக தோன்றுவாள். தங்க நகையை விட பூவிற்கு தான் அந்த சக்தி உண்டு.
- பூ ஒரு நாளில் வாடிவிடும் . ஆனால வாழ்நாள் முழுதும் பெண் வாடாமல் இருக்க பூ பல வகைகளில் பெண்களுக்கு உதவுகிறது.
இன்று பூ வைக்கும் பழக்கம் பெண்களிடையே குறைந்து வருகிறது. பெண்மை தன்மை பெண் உணர்வுடன் தொய்வு இல்லாமல் எப்போதும் இணைந்து இருக்க வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கு E .S .P சக்தி அதிகம் உள்ளது. இது பூக்கள் அணிவதால் மேம்படுகிறது.தனது முதுகுக்கு பின் யாரேனும் பார்த்தல் கூட கூருணர்வால் அறியும் சக்தி யை பூக்கள் தருகிறது. ஆனால் கூருணர்வு மரத்து விட்டால் மாராப்பை சரிசெய்ய கூட இயலாது. கூருணர்வு என்பது உடலை கடந்த உணர்வு. இது உடலுக்கு அப்பாலும் உடலுக்கு உள்ளும் இருக்கிறது.
image Credit : http://goodluckanjana.blogspot.com
image Credit : http://orkut.google.com
கோவி.வெங்கடேசன்
ஜோதிட ஆராய்ச்சியாளர்
9940676964 , 9364442500
9940676964 , 9364442500