4 November 2016

பூ சூடுவதால் பெண்களுக்கு நன்மை என்ன ?


பூ சூடுவதால் பெண்களுக்கு நன்மை என்ன ?

பூ சூடுவது என்பது ஒரு பாரம்பரியமான பழக்கம். இதை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து சென்று இருக்கிறார்கள். ஆரோக்கியமான பழக்கம் இது.தினமும் பூ பறிப்பது ஒரு நல்ல அனுபவம். பொறுமையானவர்கள் மட்டுமே பூ பறிக்க முடியும். அல்லது பூ பறிக்க கற்று கொள்வது பொறுமையை வளர்க்கும். பொறுமைக்கு பூமா தேவியை உதாரணமாக சொல்வர். பூவை பறிப்பவர்களிடத்தில் சில அனுபவங்கள் ஏற்படுவதுண்டு ,அதாவது சிலர் பூ செடிக்கு அருகில் செல்ல தயங்குவர்  மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளவர் மற்றும் கருப்பை நோய் உள்ளவர் சில நுட்ப உணர்வு உள்ள பூ செடிக்கு அருகில் சென்றால் அந்த செடி மடிந்து விடும். காய்ந்து விடும்.பின் பூக்காது.அதேவேளையில் 

  1. பெண்கள் பூ சூடுவது பெண் தன்மையை மேம்படுத்தும். தலையில் பூ வைப்பது சில நன்மைகளை செய்கிறது.
  2. பூ வில் உள்ள மிக நுட்பமான பிராண ஆற்றல் மூளையால் கவரப்பட்டு நாளமில்லா மற்றும் நாளமுள்ள சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.
  3.  பூவின் பிராண ஆற்றல் மன அழுத்தத்தை குறைத்து இயல்பான தன்மையை வழங்குகிறது. 
  4. பெண்களுக்கு பூவையர் என்று ஒரு சொல் உள்ளது. பூவை போல  மலர்ந்த முகத்துடன் இருப்பவர்கள். தலையில் பூ வைப்பவர் மற்றும் வைக்காதவர் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்.
  5. சினைமுட்டை  முதன் முதலில் வெளி வர துவங்குவதையே பெண் பெரியவளாகி விட்டாள் என்று கூறுகிறோம். அதாவது பூப்பெய்தி விட்டாள் என்று கூறுகிறோம். பெண்ணை பூவாக கருதுகிறோம். பெண்ணை பூவிற்கு ஒப்பிடுகிறோம்.

என்ன பூ சூடுவதால் என்ன நன்மை உண்டாகிறது ?


  1. தலை நோய்கள் ,தலை வலி  ஒரு தலை வலி இவை வருவதில்லை. கனகாம்பரம் இந்த அற்புதமான வேலையை செய்கிறது.
  2. தலையில் ஈறு பேன் தொல்லை இருக்காது. துளசி ,மரிக்கொழுந்து போன்ற வற்றிற்கு சக்தி அதிகம்.
  3. மல்லிகை சூடுவதால் மூளையில் உள்ள துர்நீர் இளக்கம் உண்டாகி  தும்மல் ஏற்பட்டு அனைத்து வெளியே வர துவங்குகிறது.ப்ரோலக்ட்டின் சுரப்பு இயல்பு நிலை அடைகிறது. பெண்மை தன்மையை உணர மல்லிகை மிக அதிகமாக உதவுகிறது.மல்லிகை சூடும் பெண்களுக்கு கூருணர்வு மிக தெளிவாக இருக்கும்
  4. பூ அல்லது  கனகாம்பரம்  அல்லது ரோஜா மாலை ஏதேனும் மார்பில் அணியும் போது நம் இருதய த்தின் சக்தியால் உடல் முழுவதும் பரவுகிறது.பிராண சரீரம் பலம் பெறுகிறது. இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.
  5. பூவின் சக்தி நம் உடலின் செல்களை உற்சாக படுத்தி அதன் இயல்பு தன்மையினை பெற உதவுகிறது .  இதனால் நாம் பாரம்பரிய குணாதிசயத்தை பெறுகிறோம். இன்று அதிகமானவர்களுக்கு மன அழுத்ததினால்  உடல் செல்கள் இறுகிப்போய்விடுகிறது.
  6. பூவைத்த பெண்ணை பார்க்கும் போது முழுமை நிறைந்த பெண்ணாக தோன்றுவாள். தங்க நகையை விட பூவிற்கு தான் அந்த சக்தி உண்டு. 
  7.  பூ ஒரு நாளில் வாடிவிடும் . ஆனால வாழ்நாள் முழுதும் பெண் வாடாமல் இருக்க பூ பல வகைகளில் பெண்களுக்கு உதவுகிறது.

இன்று பூ வைக்கும் பழக்கம் பெண்களிடையே குறைந்து வருகிறது. பெண்மை தன்மை பெண் உணர்வுடன் தொய்வு இல்லாமல் எப்போதும் இணைந்து இருக்க வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கு E .S .P  சக்தி அதிகம் உள்ளது. இது பூக்கள் அணிவதால் மேம்படுகிறது.தனது முதுகுக்கு பின் யாரேனும் பார்த்தல் கூட கூருணர்வால் அறியும் சக்தி யை பூக்கள் தருகிறது. ஆனால் கூருணர்வு மரத்து விட்டால் மாராப்பை சரிசெய்ய கூட இயலாது. கூருணர்வு என்பது உடலை கடந்த உணர்வு. இது உடலுக்கு அப்பாலும் உடலுக்கு உள்ளும் இருக்கிறது.

 image Credit  : http://orkut.google.com







கோவி.வெங்கடேசன் 
ஜோதிட ஆராய்ச்சியாளர் 
 9940676964 , 9364442500

31 October 2016

நாதஸ்வரத்தின் மகத்துவம் என்ன


இசையால் இசையாதவர் உலகில் இல்லை .மனிதர்கள் ,விலங்கினங்கள் ,பறவைகள் ,புல் ,பூண்டு மற்றும் அனைத்து உயிர்களும் ஏதாவது ஒரு இசையில் லயம் கொள்கின்றன. இசை என்ற அலைவரிசை மனித மனத்தோடு இணையும் போது பிரபஞ்சத்தோடு கலந்து விடுகின்றோம். மனம் விரிவடைந்து இலகுவாகிறது.
திருமண விசேஷங்களில் நாதஸ்வரம் வாசிப்பதை நாம் காண்கிறோம். அந்த இசை அனைவரின் ஆழ் மனதிலும் மங்கள ஒலியாக பதியப்பட்டுள்ளது.

நாதஸ்வர இசையை ஒலிக்கும் போது ஆழ் மனதில் உள்ள சுப மங்கள எண்ணங்களுக்கு உயிர் ஆற்றல் கிடைக்கிறது.ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் அவர்களது மனதில் பதிந்து உள்ளது. மனிதர்கள் அனைவரும் அவரவர் எண்ணப்படியே வாழ்கின்றனர். நாம் பாகுபாடின்றி நம் உறவினர் அனைவரையும் அழைக்கின்றோம். திருமண மண்டபத்தில் நாதஸ்வர ஒலியை கேட்கும்போது அனைவரின் ஆழ்மனதில் உள்ள நல்ல எண்ணங்கள் ஆற்றல் பெறும். அந்த இசையை கேட்கும் வேளையில் தீய எண்ணங்களை பற்றி யாராலும் சிந்திக்க இயலாது.

குறிப்பாக மணமக்கள் மணமேடையில் இருக்கும்போது இந்த நாதஸ்வர இசை அருமையாக வாசிக்க பட வேண்டும்.நாதஸ்வரத்தால் அனைவரையும் இசைய வைக்க வேண்டும். இசையால் இசைக்க வேண்டும். மோரை கடைந்து வெண்ணை எடுப்பதை போல அனைவரின் நல்ல எண்ணங்களை இயக்கி மணமக்களை வாழ்த்தும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

சில நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒரே நாளில் பல திருமணங்களுக்கு செல்ல திட்ட மீட்டு இருப்பார்கள்.அவர்களை தொடர்ந்து திருமணம் முடியும் வரை அமர வைக்க நாதஸ்வர இசையால் முடியும்.சில  ராகங்கள்  உள்ளது அவை மனிதனை தன்னை மறக்க வைக்கும் ,ரசிக்க வைக்கும்.
அன்னமய கோசத்தால் வளர்ந்தது இந்த உடம்பு. இந்த உடல் நாபி சக்கரத்தால் உருவாக்க பட்டு ஸ்துல இயக்கம் நடை பெறுகிறது.உணர்வு உடலுடன் தொடர்பு கொண்டு செயல்களை செய்கிறது.பயமும் ,பலமும் - அன்பும் ,வெறுப்பும்  அனைத்தும் இச் சக்கரத்தில் இருந்தே செயல் படுகிறது.

நாதஸ்வர கலைஞர் நாபிக்கமலத்தில் இருந்து ரம்மியமான இசையை இசைக்கிறார். அந்த இசைக்கு மண்டபத்தில் உள்ள அனைவரையும் இசையை வைக்கிறார். ஒத்தது ஒத்ததை ஈர்க்கும். அனைவரது நாபி  சக்கரமும் இசையில் இசைந்து கொண்டு திருமண மண்டபத்தில் மகிழ்ச்சிகரமான ,ரம்மியமான சூழலை உருவாக்கும்.

நாதஸ்வரமும் ராகங்களும் 



  1. மாப்பிளை அழைப்பிற்கு      - கல்யாணி ,சங்கராபரணம் 
  2. ஜான வாசத்திற்கு                   -  தோடி ,காம்போதி ,காரகரப்ரியா 
  3. நிச்சயதார்தம் வேளையில்     - கானடா , அட்டானா ,பியாக்கடை 
  4. திருமண வேளையில்            - கேதாரம் ,பூபாளம் ,லஹரி 
  5. முஹூர்த்தம் முன்பு              - தன்யாசி ,நாராயணி 
  6. முகூர்த்த வேளையில்           - நாட்டை குறிச்சி 
  7. தாலிகட்டும் வேளையில்      - அனந்த பைரவி 



பொதுவாக இசை மனிதனை உற்சாக படுத்துகிறது. மனிதனது வாழ்வில் அவனது வீட்டில் அல்லது அவர்களது விசேஷத்தில் நாதஸ்வரம் ஒலிக்கும் போது நன்மை நடக்கிறது. நல்ல காரியம் நடக்கிறது என்று பார்க்கின்ற கேட்கின்ற அனைவரும் அறிவர். நாதஸ்வரம் ஒரு அருமையான மணமக்களை இணைக்கும் ,இசைய வைக்கும் புனித ஒலி ஆகும் .வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் மங்கள ஒலியாகும்.

Image Credit : www.mpmnadaswaram.com

கோவி.வெங்கடேசன்
 
ஜோதிட ஆராய்ச்சியாளர் 
 9940676964 , 9364442500
மதுரை 




28 October 2016

தாலிகட்டும் போது மூன்று முடுச்சு போடுவது ஏன்


காலங்கள் மாறினாலும் கம்யூட்டர் யுகமானாலும் சில பாரம்பரிய பழக்கங்கள் மாறுவதில்லை. திருமணங்களில் பலவிதமான சடங்குகள் இன்றும் கடைபிடிக்க படுகிறது. தாலி காட்டும் போது மூன்று முடுச்சு போடுவது ஏன்  என்று அறிந்து கொள்வது மேலும் திருமண வாழ்வில் நம்பிக்கையை கொடுக்கும்.                                                                                      
திருமண வைபவத்தின் போது மாங்கல்ய தாரணம் மிக முக்கியமானது ஆகும் .அப்போது திருமணத்தை நடத்தும் புரோகிதர் திருமாங்கல்யத்தை எடுத்து மணமகன் கையில் கொடுத்து மந்திரங்கள் கூறி மூன்று முடுச்சு போட சொல்கிறார்.  அந்த மந்திரம் பின்வருமாறு. 


"மாங்கல்யம் தந்துனானே மம ஜீ வந ஹேதுநா 
கண்டே பத்தாமி ஸுபகே த்வஜீவ  சரஸ்சதம் "

பொருள்
மணமக்கள் நீண்ட காலம் வாழவேண்டும் 
நீ சுமங்கலியாக வாழவேண்டும் 
நூறு ஆண்டுகள் வாழவேண்டும் 
சுகமாக சௌவுக்கியமாக வாழவேண்டும் 

என்று பொருள் ஆகும்.

முதல் முடுச்சு கணவன் போடுவார் , அடுத்தஇரண்டு  முடுச்சு கணவனின் தங்கை அல்லது அக்காள் போடுவார். இதற்கு பொருள் என்ன வெனில் எங்கள் வீட்டோடு உன்னை இணைத்து கொண்டோம் என்று அர்த்தமாகும். பெண்ணுக்கு பின்னே கணவன் வீட்டார் புடைசூழ நின்றுகொண்டு புதிய பந்தத்தை இணைத்து கொள்வர்.. மணமகள் கழுத்தில் தாலி ஏறிய உடன்  திருமணதிற்கு வந்திருந்த அனைவரும் மங்கள வாத்தியதுடன் மணமக்களை வாழ்த்திடுவர்கள்.
தாலி என்பது மார்பில் தொட்டுக்கொண்டே இருக்கும் பந்த கயிறு ஆகும்.இதற்கு சிறப்பு உண்டு.ஒரு பெண்ணின் வாழ்வில் திருமண வாழ்வே மிக முக்கிய மன நிகழ்ச்சி ஆகும்.பெண்மை திருமணத்திற்கு பின் குழந்தை பெற்றதும் முழுமை பெறுகிறது.
Image Credit : https://commons.wikimedia.org
\




கோவி . வெங்கடேசன் 
ஜோதிட ஆராய்ச்சியாளர் 
மதுரை - 1

எங்களை அழைக்க 9940676964 , 9364442500


22 October 2016

திருமணத்திற்கு முன் குலதெய்வம் வழிபாடு அவசியமா

திருமணத்திற்கு முன் குலதெய்வம் வழிபாடு அவசியமா 


திருமண விழா நல்லபடியாக நடைபெற மற்றும் மணமக்கள் இனிதே வாழ்க்கையை துவக்க குலதெய்வம் வழிபாடு மிக அவசியம். குலதெய்வத்ததுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வது மிக நல்லது.ஒவ்வொரு பரம்பரியத்திலும்  குலதெய்வம் உண்டு. பாரம்பரிய தொடர் மேலும் தொடர நன்கு விரிவடைய குலம் செழிக்க குலதெய்வ வழிபாடு மிக அவசியம் .
குடும்பத்தோடு சென்று தான் வழிபட வேண்டும். மணமகன் வீட்டார் என்றால் வரப்போகும் பெண்ணுக்கு எடுத்த புதிய முகூர்த்த பட்டு புடவை ,ரவிக்கை ,மற்றும் எலுமிச்சம் பழம் ,பூ  மற்றும் மணமகளுக்கு அணிவிக்கும் நகை ,மாங்கல்யம் ,மண மகனின் ஆடைகள் ஆகியன வைத்து பூஜை செய்ய வேண்டும்.
இதே போன்று பெண் வீட்டாரும் அவர்கள் குலதெய்வம் சென்று பூஜை செய்ய வேண்டும்.
உப்பு மற்றும் மஞ்சள் பூஜை செய்து எடுத்து வைத்திருந்து திருமண மேடையில் விளக்குக்கு முன் வைத்து மணமக்கள் வணங்கவேண்டும்


குலதெய்வ வழிபாட்டில் கிடைக்கும் நன்மைகள் 


  1. தந்தை வழியான  குலதெய்வமே நாம் அனைவரும் வணங்குகிறோம். பெண்பிள்ளை எனில் திருமணத்திற்கு பின் கணவன் வழியில் வணங்கு கிறோம் .
  2. குலதெய்வத்தை வணங்குவதால் நமது உடலில் உள்ள ,ரத்தத்தில் உள்ள பரம்பரை குணங்கள் புதுப்பிக்க படுகிறது. 
  3. விளக்க முடியாத அனைத்து முன்னோர்கள் பற்றிய எண்ணப்பதிவுகளும் நமது மனோ சரீரத்தில் பதிந்துவிடுகிறது. இதனால் நமது வாழ்க்கை மிக எளிதாகிறது.  பாரம்பரிய குணாதிசயங்கள் நமக்கு வந்து விடுகிறது.
  4. ஒன்றுபட்ட ரத்த சம்பந்த உறவுகள் ஒரே இடத்தில் கூடுவதால் உறவு மேலும் இணைகிறது. பலம் பெறுகிறது.
  5. நாம் பல பிறவிகளாக பிறந்தாலும் ஒரே குலத்தில்  மீண்டும் பிறப்பதன்  ரகசியம் விளங்குகிறது.
  6. நமக்கு பிறக்கும் குழந்தைகள் நாம் சொல்லிக்கொடுக்காமல் சில பரம்பரை விஷயங்களை கற்று கொள்கிறது.



கோவி. வெங்கடேசன் 
ஜோதிட ஆராய்ச்சியாளர் 
மதுரை - 1

எங்களை அழைக்க 9940676964 , 9364442500

21 October 2016

ஜாதகம் பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்

ஜாதகம் பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும் ?


ஜாதக பொருத்தம் என்பது பல காலமாக  நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் அதி நம்பிக்கையான பழக்கம் ஆகும். இன்று கம்ப்யுட்டர் யுகமாக இருந்தாலும் இந்த நம்பிக்கை இன்றும் உள்ளது . மனிதனின் பிறப்பு ஜாதகம் அவனது குண நலன்களை கூறுகிறது. கண்ணுக்கு தெரியாத எங்கோ இருக்க கூடிய கிரகங்கள் மனிதனை இயக்குகிறது. அதன் படி மனிதன் இயங்குகிறான். ஜாதகத்தை பார்த்தது கூடுமானவரை ஒருவரை கணிக்க இயலும் . எனவே திருமணத்திற்கு முன் ஜாதகம் பார்ப்பது மிக அவசியமான ஒன்றாக உள்ளது . ஜாதகத்தில் குணநலன் ,உடல் அமைப்பு ,வேலை ,வசதி ,வாய்ப்புகள் ,ஆயுள் ,நோய் ,உடல் ஆரோக்கியம் ,அத்தனையும் ஓரளவு கணிக்க இயலும் . எனவே இன்றும் ஜாதகம் மக்கள் பார்க்கின்றனர் . 

 ஜாதகத்தில் பொருத்தம் இருந்தால்தான் அடுத்த கட்டம் செல்கின்ற்றனர். திருமணம் என்று பேச்சு ஆரம்பித்த உடனே பொருத்தம் மிக முக்கியமாக உள்ளது . அதிக பட்ச பொருத்த்த்தம் இருப்பது மிகவும் விரும்ப படுகிறது . ஐந்துக்கு கீழ் உள்ள பொருத்தம் அதமம் என்றும் , எட்டுக்கு கீழ் உள்ளது மத்திமம் என்றும் ஒன்பது  அல்லது அதற்கு மேல் உள்ளது உத்தமம் என்று கூறப்படுகிறது.  மொத்தம் பத்து  பொருத்தம் உள்ளது  அதனை காண்போம். 

  1. தினப்பொருத்தம் 
  2. குணம் பொருத்தம் 
  3. மகேந்திரம் பொருத்தம் 
  4. ஸ்திரி பொருத்தம் 
  5. யோனி பொருத்தம் 
  6. ராசி பொருத்தம் 
  7. ராசியாதிபதி பொருத்தம் 
  8. வசியம் பொருத்தம் 
  9. ஜ்ஜு பொருத்தம் 
  10. வேதை  பொருத்தம் 

ஆகும். பொருத்தத்தில் மிக முக்கிமானது மன பொருத்தமே ,மனப்பொருத்தம் இருப்பின் மற்ற பொருத்தத்தை பற்றி கவலை இல்லை. உங்கள் முயற்சி பலன் அளிக்கட்டும்



கோவி . வெங்கடேசன் 
ஜோதிட ஆராய்ச்சியாளர் 
மதுரை - 1

எங்களை அழைக்க 9940676964 , 9364442500


திருமணம் செய்துகொள்ள பயமாக உள்ளதா ?

திருமணம் செய்துகொள்ள பயமாக உள்ளதா ?

இன்று திருமணம் செய்து கொள்ள பயமாக சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது . பல கரணங்கள் இருக்கலாம். பணம் , அல்லது  நிரந்தர வேலை , தாய்தகப்பன்  முயற்சி எடுக்காத நிலை. ஜாதகத்தையே நம்பிக்கொண்டிருப்பது , மேலும் சில நபர்களுக்கு தங்களின் உடல் ஆரோக்கியத்தில் அவநம்பிக்கை இருக்கும் .சிலருக்கு இல்லற இன்பம் பற்றிய பயம் இருக்கும் .ஆண்மை தன்மையிலோ அல்லது பெண்மை தன்மையிலோ ஏதேனும் பிரச்சனை இருக்கலாம். 

சில குடும்பங்களில் ஏதேனும் துன்பகரமான நிகழ்வுகள் ஏற்பட்டு இருக்கலாம் . முன்னர் வீட்டுக்கு வந்த பெண் தங்க நகை அளவு விட குறைந்து இருக்கலாம். சில வரதட்சணை கொடுமைகளை பார்த்தது இருக்கலாம் .உடன் பிறந்த வர்களின்  சம்மதம் இன்றி திருமணம் தள்ளி போகலாம் . அருகில் உள்ள பிடிக்காத குடும்பங்கள் வருபவர்களை திசை திருப்பலாம் .  

என்ன செய்வது ?  கண்டு பிடியுங்கள் ஒரு பேப்பரில் எழுதுங்கள் உங்களது உண்மையான பயம் என்ன ?

  • திருமண பயத்திற்கு நீங்கள்தான் காரணமா ? 
  • திருமண பயத்திற்கு உறவினர் காரணமா ?
  • திருமண பயத்திற்கு  உங்கள் நோய் காரணமா ?
  • திருமண பயத்திற்கு  கடன் சுமை காரணமா ?
  • திருமண பயத்திற்கு  உங்களது குடும்பமே காரணமா ?

பருவத்தே பயிர் செய் என்பது பழமொழி. ,ஆடி பட்டம் தேடி விதை ,  சரியான பருவத்தில் திருமணம் செய்யவிட்டால் பிற்காலத்தில் மிக அதிகமாக வருந்த வேண்டி இருக்கும். மனிதனுக்கு ஏதேனும் பிரச்ச்னைகள் இருந்து கொண்டுதான் இருக்கும் இன்று நாற்பது வயதுக்கு முன்பே சர்க்கரை நோய்  போன்ற நீடித்த வியாதிகள்  வந்து விடுகிறது. மேலும் முப்பது வயதுக்குள் தான் வீரியம் நன்றாக இருக்கும் .யோசியுங்கள். .திருமணத்திற்கும் பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை . 

  • திருமண ஆலோசகரை  நாடலாம் 
  • மன நல ஆலோசகரை  நாடலாம் 
  • வயது முதிர்ந்த பெரியவர்களை கலந்து ஆலோசிக்கலாம் 
  • உங்களுக்கு தொடர்பு இல்லாத அனுபவம் மிக்க மனிதர்களை நாடலாம் 

முப்பது வயதிற்குள் திருமணம் செய்வது மிக நல்லது '




 
கோவி . வெங்கடேசன் 
ஜோதிட ஆராய்ச்சியாளர் 

மதுரை - 1

எங்களை அழைக்க 9940676964 , 9364442500


18 October 2016

வியாழ நோக்கம் வந்த அறிகுறிகள் என்ன ?

வியாழ நோக்கம் வந்த அறிகுறிகள் என்ன ? 
ஜோதிடத்தில்
வியாழன் என்பவர் குரு அவர். நடப்பு கோச்சாரத்தில் குரு (வியாழன் கிரகம் ) உங்களது ராசியையோ அல்லது ஐந்து ,ஏழு ,ஒன்பதாவது வீட்டையோ பார்த்தால் அது  வியாழ நோக்கம் எனப்படும். இது ஒரு வருடம் இந்த பார்வை இருக்கும்.  இந்த கோசார குரு 5,7,9 இடத்தை பார்க்கிறார் . பார்வைக்கு ஏற்ப பலன் மாறுகிறது. மூன்று இடத்திற்கும் மூன்று விதமான பலன் உண்டு. மேலும் நடப்பு  திசையை வைத்தே இந்த பலனை உறுதி யாக கூறமுடியும். ஜோதிடம் என்பது கிரகங்களின் அடிப்படையில் அனுமானித்து கூறுவது ஆகும். இது பல நேரங்களில் சரியாகவும் சில நேரங்களில் தவறாகவும் போய்விடுகிறது.  ஆனால்  நடை முறை வாழ்வில் கீழ் கண்ட  அனுபவங்கள்  பலருக்கு  வியாழ நோக்கம் உள்ள அறிகுறிகளை காட்டுகிறது. இதை வைத்து மேலும் உறுதி செய்து கொள்ளலாம். மனிதனுக்கு உரிய பிராண சரீரத்தில் உள்ள சக்கரங்களின் இயக்கங்களில் வியாழன் என்ற கிரகத்தின்  ஆதிக்கம் அதிகமாகிறது. அப்போது மண்ணீரல் மற்றும் சுவாதிஸ்டான சக்கரமும் உச்சத்தில் இருக்கும்.

  1. உடலில் இது வரை இல்லாத புத்துணர்வு ஏற்படும். முன்பைவிட தோற்றம் மிக தெளிவாக இருக்கும். பார்ப்பவர்கள் மிக புதுமையாக பார்ப்பார்கள்.  மிக அழகாக தெரிவர் .
  2. கண்களில் ஒளி அதிகரிக்கும், கன்னங்களில் பள பளப்பு அதிகரிக்கும். உடல் தனது இளமை தன்மையின் உச்சத்தை அடைந்து விடும்.
  3. நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது திருமணத்தை பற்றி பேச துவங்குவர். விருப்பங்களை தெரிவிப்பர் . சொந்த பந்தம் , செய்தித்தாள் ,திருமண தகவல் மையம்  போன்ற இடங்களை உற்று நோக்குவர்.
  4. ஆடை அணிகலன்களில் மிக கவனம் செலுத்துவர். முக அழகு , உடல் ஆரோக்கியம் ,தலைமுடி  போன்ற விஷயங்களை அதிக அக்கறை கொள்வர். 
  5. கோவில் பரிகாரங்கள் ,திருமண தடை பரிகாரங்கள் , கோவில் வேண்டுதல்  இவைகளில் தடை சொல்லாமல் கடை பிடடிப்பர். 
  6. சிலருக்கு  காதல் உணர்வு ஏற்படலாம். வேண்டாம் என்று கழித்த பெண் அல்லது மாப்பிளையை மீண்டும் பார்க்க தூண்டுவர். வலியுறுத்தி மணம் முடிக்க விருப்பம் கொள்வர்.

வியாழ நோக்கம் என்பது ஒரு மனிதனின் சுயமாக முடிவு எடுக்கும் அல்லது தனது நிலையை முழுமையாக அறிந்து கொள்ளும் தருணம் ஆகும். பழம் பழுத்து பக்குவமாக இருக்கும் காலமாகும். காலத்தையும் ,ஜோதிட கட்டத்தையும் ,நடப்பு அனுபவத்தையும் இணைத்து பார்த்தால் வியாழ நோக்கம் எது என்று புரியலாம்.


கோவி . வெங்கடேசன் 
ஜோதிட ஆராய்ச்சியாளர் 
மதுரை - 1
எங்களை அழைக்க 9940676964 , 9364442500